இது 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் (செப்டம்பர் 16) நீதிக் கட்சி மாகாண அரசாங்கத்தால் வழங்கப் பட்டது.
அது இந்தியக் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மற்றும் ஆதி-திராவிடர் ஆகியோரை உள்ளடக்கிய பிராமணரல்லாதோர் மாகாணச் சேவைகளில் வகிக்கும் பதவிகளின் விகிதத்தை அதிகரிக்க முயன்றது.
இது பிராமணரல்லாதவர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு நிர்வாகம் மற்றும் அரசியலில் அவர்களுக்கு வேண்டிய இடத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பி.ஆர். அம்பேத்கர் தலித்துகளுக்கான அரசியல் இட ஒதுக்கீட்டை 1919 ஆம் ஆண்டில் சவுத்பரோ குழுவிடம் (Southborough Committee) கோரினார்.
1928 ஆம் ஆண்டில், சுப்பராயன் ஆட்சியின் கீழ் அப்போதையக் கல்வி அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் 1921 ஆம் ஆண்டின் ஆணையை அமல்படுத்த ஒரு வகுப்புவாத அரசாணையை அறிமுகப் படுத்தினார்.