வங்க தேசத்தின் 22வது குடியரசுத் தலைவராக முகமது சஹாபுதீன் பதவியேற்றார்.
அவர் 1966 ஆம் ஆண்டில் 6-அம்ச இயக்கம், 1967 ஆம் ஆண்டில் பூட்டா (சோளம்) இயக்கம், 1969 ஆம் ஆண்டில் வெகுஜன எழுச்சிகள், 1970 ஆம் ஆண்டுத் தேர்தல் மற்றும் 1971 ஆம் ஆண்டில் விடுதலைப் போர் ஆகியவற்றில் தீவிரமாகப் பங்கேற்றார்.
1975 ஆம் ஆண்டில் பங்கபந்து ஷேக் முஜிபுர்ரஹ்மானின் கொடூரமான ஒரு கொலைக்கு எதிராக ஒரு போராட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.
அதற்காக அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டார்.