2019/20 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின் படி சுந்தர வனக்காடுகளில் ராயல் வங்காளப் புலிகளின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளதாக மேற்கு வங்க வனத்துறை அறிவித்துள்ளது.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் கீழ், ராயல் வங்காளப் புலிகளானது அழிந்து வரும் உயிரினங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4,262 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள சுந்தரவனக் காடுகளில் சதுப்புநிலப் பகுதி மட்டும் 2,125 சதுர கி.மீ ஆகும்.
இது உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு மற்றும் தெற்காசியாவின் மிகவும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.
இது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சுந்தரவனக் காடுகள் வங்கப் புலிகளின் தாயகமும் ஆகும்.
இந்தியாவின் மொத்த அலையாத்தி (மாங்குரோவ்) காடுகளின் பரப்பில் இந்தியாவின் சுந்தரவனக் காடுகள் மட்டும் 60 சதவிகித பரப்பைக் கொண்டுள்ளன.
இது இந்தியாவின் 27வது ராம்சார் தளமாகும்.
இது இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட ஈரநிலமாகும் (4,23,000 ஹெக்டர்கள்).
இது மிகவும் வெகுவாக அருகிவரும் வடக்கு நதி வகை ஆமை, அருகிவரும் ஐராவதி டால்பின் மற்றும் பாதிக்கப்படக் கூடிய வேட்டையாடும் பூனை போன்ற அதிக அளவிலான, அரிதான மற்றும் உலகளவில் ஆபத்துக்குள்ளான உயிரினங்களுக்கான புகலிடமும் ஆகும்.