பொதுத்துறை வங்கிகளானது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், பல்வேறு மாநிலங்களில் வங்கி இல்லாத பகுதிகளில் கட்டிடங்களுடன் கூடிய சுமார் 300 வங்கி கிளைகளைத் தொடங்க உள்ளது.
இந்தப் புதிய கிளைகள் 3,000க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட, எஞ்சியுள்ள வங்கிகள் இல்லாத அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கி அதற்கான சேவைகளை வழங்கும்.
ராஜஸ்தானில் அதிகபட்சமான அளவில் 95 கிளைகளும், அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 54 கிளைகளும் திறக்கப்படும்.
பொதுத் துறை வங்கிகள் குஜராத்தில் 38 கிளைகளையும், மகாராஷ்டிராவில் 33 கிளைகளையும், ஜார்க்கண்டில் 32 கிளைகளையும் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 31 கிளைகளையும் திறக்க உள்ளது.