TNPSC Thervupettagam

வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கான குறைதீர்ப்பு அமைப்பு

February 28 , 2018 2335 days 656 0
  • இந்திய ரிசர்வ் வங்கி , வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு எதிரான குறைகளை தீர்ப்பதற்காக குறைதீர்ப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
  • ரிசர்வ் வங்கியினைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் துரிதமாகவும், கட்டணம் ஏதுமின்றியும் வங்கி சாராத நிதி நிறுவனங்களால் அளிக்கப்படும் சேவைகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய உதவும்.
  • நுகர்வோர்களின் புகார்களைப் பொறுத்து இந்த அமைப்பு மண்டல ரீதியாக (சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் புது தில்லி) செயல்படும்.
  • இந்த குறைதீர்ப்புத் திட்டம் புகார்தாரருக்கு அதாவது வாடிக்கையாளரோ அல்லது வங்கி சாராத நிதி நிறுவனமோ இந்த அமைப்பின் முடிவை எதிர்த்து மேல்முறையீட்டு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யும் நடைமுறையை ஏற்படுத்தித் தருகிறது.
  • உள்கட்டமைப்பு நிதி நிறுவனம், மைய முதலீட்டு நிறுவனம், உள்கட்டமைப்பு கடன் வசதி நிறுவனம் மற்றும் கலைப்பில் உள்ள வங்கி சாராத நிதி நிறுவனம் ஆகியவை இந்த குறைதீர்ப்பு அமைப்பின் வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்