ரூ.1 லட்சத்துக்கும் மேல் வைப்புத் தொகை கொண்ட வங்கிக் கணக்குகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை & மேம்பாட்டு ஆணையம் ஆகியன பரிந்துரைத்துள்ளன.
தற்போது, வைப்புத் தொகைக் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகமானது (Deposit Insurance and Credit Guarantee Corporation - DICGC) ரூ.1 லட்சம் மற்றும் அதற்குக் குறைவான வைப்புத் தொகைகளுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகையைக் கொண்டுள்ளது.
வைப்புத் தொகைக் காப்பீடு என்பது பிரீமியத்தைப் பெறுவதன் மூலம் வைப்புத் தொகையாளரின் பணத்திற்கு காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குகின்றது.
DICGC பற்றி
ஒரு வங்கி திவாலாகும் நிலையில் அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசாங்கமானது ரிசர்வ் வங்கியின் கீழ் DICGCஐ அமைத்துள்ளது.
ஒவ்வொரு காப்பீட்டு வங்கியும் ஒவ்வொரு ஆண்டும் அதன் வைப்புத் தொகைகளில் 0.001% தொகையை DICGCக்குச் செலுத்துகின்றது.
ஒரு வங்கி கலைக்கப் பட்டால், அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் DICGCயிலிருந்து ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகையைப் பெற உரிமை உண்டு.
DICGC அமைப்பானது இந்த வகையான பரிவர்த்தனையை நேரடியாக வங்கியின் கணக்கு வைப்பாளர்களுடன் கையாள்வதில்லை.