TNPSC Thervupettagam
April 16 , 2018 2317 days 741 0
  • மத்திய நிதி அமைச்சகம் வங்கிகள் வாரியத் துறையை திருத்தியமைத்து அதன் தலைவராக திரு. பானு பிரதாப் ஷர்மாவை நியமித்துள்ளது. இதற்கு முன் இதன் தலைவராக முன்னாள் மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய் பதவி வகித்தார்.
  • திரு.ஷர்மா, இதற்கு முன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பணியமர்த்தல் மற்றும் மதிப்பிடல் மையத்தின் தலைவராகவும், பீகார் மாநிலத்தில் நிதித்துறை முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
  • அரசு, வங்கிகள் வாரியத் துறையை திருத்தியமைத்ததோடு வேதிகா பந்தர்கர், P.பிரதீப் குமார் மற்றும் பிரதீப் ஷா ஆகியோரை புதிய உறுப்பினர்களாக நியமித்துள்ளது.

வங்கிகள் வாரியத்துறை

  • பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்ட உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புடைமையைக் கொண்டுள்ள வங்கிகள் வாரியத்துறை திரு.ராய் அவர்களின் தலைமையில் ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது.
  • J. நாயக் என்பவர் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வங்கிகள் வாரியத்துறை அமைக்கப்பட்டது.
  • வங்கிகள் வாரியத்துறை, வங்கிகளின் ஆளுகை, அரசு சார் வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகளை அளித்தல், வங்கிகள் அவற்றின் உத்திகளை உருவாக்குவதற்கு மற்றும் மூலதனங்களை திரட்டுவதற்கான திட்டங்களை வகுப்பதற்கு வங்கிகளுக்கு உதவுதல் ஆகியவற்றை கடமையாகக் கொண்டுள்ளது.
  • வங்கிகள் வாரியத்துறையானது மும்பையில் ரிசர்வ் வங்கியில் அமைந்துள்ளது.
  • இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகும். இது மார்ச் 2018 உடன் முடிவடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்