TNPSC Thervupettagam

வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்: ரிசர்வ் வங்கி

October 22 , 2017 2462 days 813 0
  • அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் முன்னணி தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஹெச்.டி.எப்.சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் வைப்புகளை பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • தேசிய சேமிப்பு பத்திரம் (National Saving Certificate) தொடர் வைப்பு சேமிப்பு திட்டம், மாதாந்திர வருவாய் அடிப்படையிலான சேமிப்பு திட்டம் போன்றவை போல பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களிடைய சிறு சேமிப்பை ஊக்குவிக்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • இதுவரை பொது வருங்கால வைப்பு நிதி, கிஷான் விகாஸ் பத்திரம் – 2014, பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி சேமிப்பு, 2014ஆம் ஆண்டின் மூத்த குடிமகன்கள் சேமிப்பு திட்டம் போன்றவற்றின் கீழ் மட்டுமே சந்தாக்கள் பெற வங்கிகள் அனுமதிக்கப்பட்டன. பெரும்பாலான சிறு சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் நிலையங்களிலே செயல்படுத்தப்பட்டு வந்தன.
  • இத்திட்டத்தின் மூலம் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான சேவை விற்பனை நிலையங்களை அதிகரிப்பதன் மூலம் நிதி திரட்டலை மேற்கொள்ள இயலும்.
  • அரசாங்கத்தின் முடிவின் அடிப்படையில் கடந்த 2016 ஏப்ரல் மாதத்திலிருந்து சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்