வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்: ரிசர்வ் வங்கி
October 22 , 2017 2591 days 889 0
அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் முன்னணி தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஹெச்.டி.எப்.சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் வைப்புகளை பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய சேமிப்பு பத்திரம் (National Saving Certificate) தொடர் வைப்பு சேமிப்பு திட்டம், மாதாந்திர வருவாய் அடிப்படையிலான சேமிப்பு திட்டம் போன்றவை போல பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களிடைய சிறு சேமிப்பை ஊக்குவிக்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை பொது வருங்கால வைப்பு நிதி, கிஷான் விகாஸ் பத்திரம் – 2014, பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி சேமிப்பு, 2014ஆம் ஆண்டின் மூத்த குடிமகன்கள் சேமிப்பு திட்டம் போன்றவற்றின் கீழ் மட்டுமே சந்தாக்கள் பெற வங்கிகள் அனுமதிக்கப்பட்டன. பெரும்பாலான சிறு சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் நிலையங்களிலே செயல்படுத்தப்பட்டு வந்தன.
இத்திட்டத்தின் மூலம் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான சேவை விற்பனை நிலையங்களை அதிகரிப்பதன் மூலம் நிதி திரட்டலை மேற்கொள்ள இயலும்.
அரசாங்கத்தின் முடிவின் அடிப்படையில் கடந்த 2016 ஏப்ரல் மாதத்திலிருந்து சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகின்றன.