2024 ஆம் ஆண்டு வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா ஆனது, மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வங்கிச் சட்டங்கள் ஆனது, ஒரு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் நான்கு வாரிசுதாரர்கள் வரை நியமிக்க அனுமதிக்கின்றன, இதில் ஒரே நேரத்தில் பணம் மற்றும் நிலையான வைப்புத் தொகைக்கான வாரிசுதார நியமனங்களும் அடங்கும்.
கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களின் (தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர் தவிர) பதவிக் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கவும் இந்த மசோதா முயல்கிறது.
இனி ஒரு மத்தியக் கூட்டுறவு வங்கியின் இயக்குநர் ஒரு மாநிலக் கூட்டுறவு வங்கியின் குழுவில் பணியாற்ற முடியும்.