TNPSC Thervupettagam

வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா – 2024

August 17 , 2024 101 days 150 0
  • அரசாங்கம் ஆனது 2024 ஆம் ஆண்டு வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதாவினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஒரு வங்கிக் கணக்கிற்கு வாரிசுதாரர்களாக நியமிப்பதற்கான விருப்பத் தேர்வு எண்ணிக்கையினை ஒன்றிலிருந்து நான்கு என்ற அளவாக அதிகரிக்க இந்த மசோதா முயல்கிறது.
  • உரிமை கோரப்படாத முதலீட்டாளர்கள் பங்குத் தொகைகள், பங்குகள், வட்டி அல்லது பத்திரங்களை மீட்டெடுப்பது ஆகியவற்றின் ஒதுக்கீடுகளை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியம் (IEPF) மேற்கொள்ள இந்த மசோதா பரிந்துரைக்கிறது.
  • இது இயக்குநர் பதவிகளுக்கான 'கணிசமான வட்டி' அளவினை மறுவரையறை செய்கிறது என்பதோடு இது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய்க்குப் பதிலாக 2 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.
  • ஒழுங்குமுறை இணக்கத்திற்கான வங்கிகளின் அறிக்கையிடல் தேதிகளை இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளுக்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் கடைசி நாளன்று நிர்ணயிப்பதற்கும் இந்த மசோதா முயல்கிறது.
  • இந்த மசோதா பின்வருவனவற்றில் திருத்தம் மேற்கொள்ள முன்மொழிகிறது;
    • இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934,
    • வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949,
    • பாரத ஸ்டேட் வங்கி சட்டம், 1955,
    • வங்கி நிறுவனங்கள் (பங்கீடுகளைக் கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றுதல்) சட்டம், 1970 மற்றும்
    • வங்கி நிறுவனங்கள் (பங்கீடுகளைக் கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றுதல்) சட்டம், 1980.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்