வங்கியியல் அல்லாத நிதியியல் நிறுவனங்களின் (NBFC) மீதான ஒழுங்குமுறை
January 31 , 2021 1396 days 627 0
இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) வங்கி அல்லாத நிதியியல் நிறுவனங்களின் (NBFC)வலுவான ஒழுங்குமுறைக்காக 4 நிலை கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த 4 நிலை கொண்ட அமைப்பானது கீழ் அடுக்கு, மைய அடுக்கு, மேல் அடுக்கு மற்றும் சாத்தியமுள்ள மேல் அடுக்கு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
RBI ஆனது NBFC நிறுவனங்களில் உள்ள கீழடுக்கில் தாமதமாக செலுத்தப்படும் காலத்தைப் பொறுத்து வாராக் கடனின் வகைப்பாட்டை 180 நாட்களிலிருந்து 90 நாட்களாகக் குறைக்கப் பரிந்துரைத்துள்ளது.
NBFC மீதான ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வைப் பொறுப்பானது இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 என்ற சட்டத்தின் கீழ் RBI வசம் உள்ளது.
NBFC பற்றி
NBFC என்பது நிறுவனங்கள் சட்டம், 1956 என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
NBFC கோரிக்கை வைப்பு நிதியை ஏற்றுக் கொள்ளாது.
மேலும் இவை பணவழங்கீடு மற்றும் தீர்வு முறையின் ஒரு பகுதி அல்ல.