TNPSC Thervupettagam

வசந்தகால சம இரவு பகல் நாள் - மார்ச் 20

March 26 , 2025 5 days 86 0
  • இந்த நாள் ஆனது வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் வசந்த கால சம இரவு பகல் நாளின் தொடக்கத்துடன் தெற்கு அரைக்கோளத்தில் இள வேனிற் காலத்தின் தொடக்கத்தினையும் குறிக்கிறது.
  • இந்த நாளில், சூரியன் ஆனது நண்பகலில் நிலநடுக்கோட்டுக்கு மிகவும் நேர் எதிராக உச்சியில் தோன்றும்.
  • சம இரவு பகல் நாளானது, ஒரு ஆண்டிற்கு இரண்டு முறை என அதாவது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிகழ்கின்றன என்பதோடு மேலும் இரு துருவங்களும் ஒரே நேரத்தில் சூரிய ஒளி பெறும் கால கட்டம் இதுவாகும்.
  • வடக்கு அரைக்கோளத்தில், வசந்த கால அல்லது இளவேனிற் கால சம இரவு நாள் ஆனது பொதுவாக மார்ச் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளுக்கு இடையில் நிகழ்கிறது.
  • இலையுதிர் கால சம இரவு நாளானது செப்டம்பர் 21 மற்றும் 24 ஆகிய தேதிகளுக்கு இடையில் நிகழ்கிறது.
  • சம இரவு பகல் நாள் என்பது, ஒரு ஆண்டில் பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டும் சம கால நீளத்தில் இருக்கும் நேரத்தைப் பிரதிபலிக்கிறது.
  • சம இரவு பகல் நேரத்தில், பூமியின் அச்சு மற்றும் சுற்றுப்பாதை ஆகியவை இரண்டு அரைக் கோளங்களும் சம அளவு சூரிய ஒளியைப் பெறும் வகையில் அமைகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்