வடகிழக்கு இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக இணைய தளம் மூலமாக தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தரும் இணைய மேடையான Airbnb நிறுவனம் 4 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு அமைப்புகளுடன் கையெழுத்திட்டுள்ளது.
வட கிழக்கு குழு (North Eastern Council - NEC), வடகிழக்கு சுற்றுலா மேம்பாட்டுக் குழு (North East Tourism Development Council - NETDC) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
வடகிழக்கு ஊரக வாழ்வாதாரத் திட்டம் (North East Rural Livelihood Project - NERLP), வடகிழக்குப் பிராந்திய சமூக ஆதார மேலாண்மை சங்கம் (North Eastern Region Community Resource Management Society -NERCRMS) என்ற இரு முக்கிய வாழ்வாதாரத் திட்டங்களிலும் கையெழுத்திட்டுள்ளது.
வட கிழக்கு இந்தியாவின் சுற்றுலாத் துறையில், சிறு தொழில் முனைவோர்களுக்கு (Micro - entrepreneurs) உகந்த தொழில் தொடங்குச் சூழலை (hospitality) ஏற்படுத்தித் தருவதே இந்த MoUவின் நோக்கமாகும்.
இந்த ஒப்பந்தத்தில் ‘Airbnb’ அமைப்பினுடைய உலகளாவிய இணைய மேடை மூலம் வடகிழக்கு இந்தியாவில் சுற்றுலாத் துறையை விரிவுபடுத்த Airbnb நிறுவனம், வட கிழக்கு குழு, வட கிழக்கு சுற்றுலா மேம்பாட்டுக் குழு ஆகியவை உறுதியேற்றுள்ளன.