வடகொரியா தனது அணு ஆயுத சோதனைக் களத்தை அழித்துள்ளது.
பியாங்யாங், தமது நாட்டின் வடகிழக்கில் உள்ள புங்கையி-ரி சோதனைக் களத்தை முழுமையாக அழிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அழிப்பினை கண்டிட சில வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
புங்கையி-ரி சோதனைக் களம், சீனாவின் எல்லைக்கு அருகே அமைந்துள்ள வடக்கு ஹம்தியாங் மாகாணத்தில் மலைக்கு உள்ளே புதைந்துள்ள வடகொரியாவின் ஒரே சோதனைக் களமாக அறியப்படுகிறது.