கடுமையான புவி காந்தப் புயல் பூமியைத் தாக்கியதால், இந்தியாவின் லே பகுதியின் வானத்தில் துருவ மின்னொளி தோன்றியது.
இந்த நிகழ்வு ஆனது பூமியை அடைந்த சூரியனில் இருந்து வெளி வந்த ஒரு சக்தி வாய்ந்த சூரிய வெப்ப உமிழ்வு (CME) காரணமாக தூண்டப்பட்டது.
CME ஆனது X1.8 சூரியச் சுடரில் இருந்து உருவானது என்பதோடு மேலும் அது மணிக்கு 1.5 மில்லியன் மைல்களுக்கு மேலான வேகத்தில் பயணித்தது.
தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு (NOAA) ஆனது இந்தப் புவி காந்தப் புயலை G4 என வகைப்படுத்தியது.
மின் கட்டமைப்புகள் மற்றும் செயற்கைக் கோள் செயல்பாடுகளைச் சீர்குலைக்கும் கடுமையான நிலைமைகளை இது குறிக்கிறது.
சூரியச் செயல்பாடு ஆனது ஒரு சுழற்சிக்கு ஒரு முறை சூரிய சக்தியின் உச்சத்தை அடைகின்ற 11 ஆண்டுகால சுழற்சியில் உச்சத்தை அடைகிறது என்ற நிலையில் இது 2025 ஆம் ஆண்டில் நிகழ உள்ளது என்பதோடு மேலும் இதன் விளைவுகள் 2026 ஆம் ஆண்டு வரை உணரப்படும்.