வடகிழக்கு மாநிலங்களான திரிபுராவில் பிப்ரவரி 18 அன்றும் நாகலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27 அன்றும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் தற்போது ஆட்சி நடத்தி வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் பதவிக் காலம் முறையே மார்ச் 6, 13, 14 ஆம் தேதிகளில் முடிவடைய உள்ளது.
இம்மூன்று வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் 60 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன.
மேகாலயா
தேசிய மக்கள் கட்சியின் (National People’s Party-NPP) தலைவர் கன்ராட் சங்மா மேகாலயாவில் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
தலைநகர் ஷில்லாங்கில் மேகாலயா ஆளுநர் கங்கா பிரசாத் கன்ராட் சங்மாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தேசிய மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி மற்றும் மலை மாநில மக்கள் ஜனநாயக கட்சி (Hill State People’s Democratic Party -HSPDP) மற்றும் பிற கட்சிகளின் கூட்டணியை கன்ராட் சங்மா தலைமையேற்று நடத்த உள்ளார்.
நாகலாந்து
நாகாலாந்து தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் தலைவர் நெய்பியூ ரியோ நாகாலாந்து மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
நாகாலாந்து மாநில ஆளுநர்B ஆச்சார்யா இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பாரதிய ஜனதாக் கட்சியின்பட்டான் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். நெய்பியூ ரியோ 2003 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 3 முறை நாகலாந்தின் முதலமைச்சராக பதவி வகித்தார்.
தொடர்ந்து 3 முறை நாகலாந்தின் முதலமைச்சராக பதவி வகித்த ஒரே நபர் ரியோ மட்டுமே ஆவார்.
4வது முறையாக நெய்பியூ ரியோ நாகலாந்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
பாரதிய ஜனதாக் கட்சியுடனான மக்கள் ஜனநாயகக் கூட்டணி அரசை நெய்பியூ ரியோ தலைமை ஏற்று நடத்த உள்ளார்.
திரிபுரா
இடதுசாரிக் கட்சிகளின் கோட்டையான திரிபுராவில், திரிபுரா சுதேச மக்கள் கட்சி [IPFT – Indigenous People’s Front of Tripura] மற்றும் பாரதிய ஜனதாக் கூட்டணி 43 சட்டமன்ற தொகுதிகளை வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
திரிபுராவில் பலம் வாய்ந்த கட்சியான மார்க்ஸிஸ்ட் கட்சி 16 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.
திரிபுராவில் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரான பிப்லப் குமார் தேப் திரிபுராவின் 10-வது முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
1998 ஆம் ஆண்டிலிருந்து மாணிக் சர்கார் திரிபுராவின் முதல்வராக சேவை புரிந்து வந்தார். இவர் தொடர்ந்து 4 முறை திரிபுராவின் முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.