TNPSC Thervupettagam

வடகிழக்கு தேர்தல்கள்

March 9 , 2018 2326 days 669 0
  • வடகிழக்கு மாநிலங்களான திரிபுராவில் பிப்ரவரி 18 அன்றும்  நாகலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27 அன்றும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
  • மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் தற்போது ஆட்சி நடத்தி வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் பதவிக் காலம் முறையே மார்ச் 6, 13, 14 ஆம் தேதிகளில் முடிவடைய உள்ளது.
  • இம்மூன்று வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் 60 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன.

மேகாலயா

  • தேசிய மக்கள் கட்சியின் (National People’s Party-NPP) தலைவர் கன்ராட் சங்மா மேகாலயாவில் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
  • தலைநகர் ஷில்லாங்கில் மேகாலயா ஆளுநர் கங்கா பிரசாத் கன்ராட் சங்மாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • தேசிய மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி மற்றும் மலை மாநில மக்கள் ஜனநாயக கட்சி (Hill State People’s Democratic Party -HSPDP) மற்றும் பிற கட்சிகளின் கூட்டணியை கன்ராட் சங்மா தலைமையேற்று நடத்த உள்ளார்.

நாகலாந்து

  • நாகாலாந்து தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் தலைவர் நெய்பியூ ரியோ நாகாலாந்து மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
  • நாகாலாந்து மாநில ஆளுநர்B ஆச்சார்யா இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • பாரதிய ஜனதாக் கட்சியின்பட்டான் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். நெய்பியூ ரியோ 2003 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 3 முறை நாகலாந்தின் முதலமைச்சராக பதவி வகித்தார்.
  • தொடர்ந்து 3 முறை நாகலாந்தின் முதலமைச்சராக பதவி வகித்த ஒரே நபர் ரியோ மட்டுமே ஆவார்.
  • 4வது முறையாக நெய்பியூ ரியோ நாகலாந்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
  • பாரதிய ஜனதாக் கட்சியுடனான மக்கள் ஜனநாயகக் கூட்டணி அரசை நெய்பியூ ரியோ தலைமை ஏற்று நடத்த உள்ளார்.

திரிபுரா

  • இடதுசாரிக் கட்சிகளின் கோட்டையான திரிபுராவில், திரிபுரா சுதேச மக்கள் கட்சி [IPFT – Indigenous People’s Front of Tripura] மற்றும் பாரதிய ஜனதாக் கூட்டணி 43 சட்டமன்ற தொகுதிகளை   வென்று   ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
  • திரிபுராவில் பலம் வாய்ந்த கட்சியான மார்க்ஸிஸ்ட் கட்சி 16 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.
  • திரிபுராவில் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரான பிப்லப் குமார் தேப் திரிபுராவின் 10-வது முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
  • 1998 ஆம் ஆண்டிலிருந்து மாணிக் சர்கார் திரிபுராவின் முதல்வராக சேவை புரிந்து வந்தார். இவர் தொடர்ந்து 4 முறை திரிபுராவின் முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்