வடகிழக்கு பிராந்தியத்திற்கான நிதி ஆயோக் மன்றம் ஒன்றை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் மற்றும் மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் இணை அமைச்சர் (Ministry of Development of Northeast Region) ஆகியோர் இம்மன்றத்தின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தில் இதனுடைய செயலகம் அமைய உள்ளது.
வடகிழக்கு பிராந்தியத்தில் நீடித்த மற்றும் வேகமான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குத் தேவையான, பொருந்தக்கூடிய முன்னெடுப்புகளை பரிந்துரைக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளவற்றை அடையாளப்படுத்தவும் இம்மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.