TNPSC Thervupettagam

வடகிழக்குப் பருவமழை 2024

January 31 , 2025 23 days 141 0
  • சென்னையின் பிராந்திய வானிலை ஆய்வு மையம் ஆனது, தெற்கு இந்தியத் தீபகற்பப் பகுதியிலிருந்து வடகிழக்குப் பருவக்காற்று விலகியதாக அறிவித்துள்ளது.
  • இந்தப் பருவத்தின் இடையிடையே மழைப் பொழிவில் இடைவெளிகள் இருந்தாலும், வானிலை அமைப்புகளின் இயக்கம் ஆனது பருவக்காற்றினைச் செயலில் இருப்பதாக கருதியது.
  • ஜனவரி மாத இறுதி வரையில் பருவக் காற்று நீடித்த சில அரிய ஆண்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
  • பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 ஆம் தேதிக்கு இடைப் பட்ட காலத்தில் பருவக்காற்று விலகும்.
  • அக்டோபர் மற்றும் டிசம்பர் போன்ற பருவக் காற்று மாதங்களில் சராசரியாக 44.3 செ.மீ மழை பெய்யும் நிலையில், தமிழ்நாட்டில் சுமார் 58.9 செ.மீ மழை பெய்தது.
  • ஜனவரி 28 ஆம் தேதியன்று தமிழகம் மாநிலம் ஆனது, 1933-34 ஆம் ஆண்டின் மிகவும் தாமதமான பருவமழையினை எதிர்கொண்டது.
  • 1901 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலான ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு ஆண்டுகளில் முந்தைய ஆண்டின் பருவக்காற்றானது அடுத்த ஆண்டிற்கும்  நீடித்தது.
  • 1901 ஆம் ஆண்டு முதல் கடந்த 28 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் பருவமழையானது தமிழக மாநிலத்திலிருந்து பின்னடைந்தது.
  • இத்தகைய நீட்டிக்கப்பட்டதொரு பருவமழை நிகழ்வு ஆனது 2011 ஆம் ஆண்டு முதல் அடிக்கடி நிகழ்கிறது.
  • தென்மேற்கு பருவமழையைப் போல அல்லாமல், பின்வாங்கும் பருவமழை என்றும் அழைக்கப் படும் வடகிழக்கு பருவமழையானது, பின்னடையும் போது காற்று ஓட்ட வடிவத்தில் திசை மாற்றம் போன்ற வானிலை அளவுருக்களில் வியத்தகு மாற்றத்தைக் கொண்டிருக்கவில்லை.
  • மழைப் பொழிவுக் குறைவு என்பது பருவமழை மீதான பின்னடைவிற்கான முக்கிய அளவுருக்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்