டெராபின் எனும் சிறிய ஆமை இனம் நன்னீர் அல்லது உவநீரில் வாழும்.
படாகுர் பஸ்கா (Batagur Baska)என்று பொதுவாக அழைக்கப்படும் டெராபின் இன ஆமைகள் ஆற்று நீரில் வாழ்வன. இவை தென் கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN), இதனை அழிந்து வரும் தருவாயில் உள்ள உயிரினங்கள் (Critically Endangered - CR)என்று வகைப்படுத்தியுள்ளது.
இந்த இனங்கள் தற்போது வங்காளதேசம் (சுந்தரவனக் காடுகள்), இந்தியா (மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா), இந்தோனேசியா, கம்போடியா மற்றும் மலேசியா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
டெராபின் ஆமை வகையானது அனைத்துண்ணிகளாகும். மேலும் இவை நன்னீர் வாழிடங்களை விரும்புகின்றன.
இனப்பெருக்கப் பருவத்தில் ( டிசம்பர் - மார்ச் ) உவர் நிலங்களுக்கோ அல்லது அவற்றின் முகத்துவாரங்களுக்கோ இடம்பெயர்ந்து தங்களது முட்டைகளை இட்டுச் செல்கின்றன.
சுந்தரவனக் காடுகள் புலிகள் காப்பகத்தில், இந்த ஆமைகளை இயற்கையான அபாயங்களில் இருந்து காப்பதற்கும், இவற்றின் மரபணு மேலாண்மைக்கும், இனப்பெருக்கத் திட்டமொன்றை அரசு செயல்படுத்திப் பாதுகாத்து வருகிறது.