TNPSC Thervupettagam

வடக்கு வங்காளத்தில் அந்நிய நிலப்பகுதியில் வசிப்பவர்களுக்கு நில உரிமை

November 26 , 2018 2064 days 554 0
  • வடக்கு வங்காளப் பகுதியின் அந்நிய நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நில உரிமைகளை வழங்குவதன் மூலம் அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் நிச்சயமற்ற எதிர்காலத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மேற்கு வங்காள சட்டசபையானது மேற்கு வங்க நிலச் சீர்திருத்த (திருத்தம்) மசோதா 2018 என்ற மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
  • ஆகஸ்ட் 1, 2015-ல் இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகியவை மொத்தமாக 162 நிலப்பகுதிகளைப் பரிமாறிக் கொண்டன.
  • இந்த பரிமாற்றமானது, சுதந்திரத்திற்குப் பின்னராக 7 தசாப்தங்களாக நீடித்து வந்த உலகின் மிகவும் சிக்கலான எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தது.
  • இந்த மசோதாவானது அந்நிய நிலப்பகுதி வாழ்மக்கள் முழுமையான இந்திய குடிமக்கள் என்ற தகுதியைப் பெறவும் அனைத்து குடிமகன்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பெறவும் உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்