TNPSC Thervupettagam

வடக்கு வழுக்கைத் தலை அரிவாள் மூக்கன்

September 6 , 2024 78 days 104 0
  • வால்ட்ராப் என்றும் அழைக்கப்படும் வழுக்கைத் தலை அரிவாள் மூக்கன் பறவை ஆனது, வட ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம் மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது.
  • இருப்பினும், வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட அழிவு காரணமாக சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய ஐரோப்பாவில் இந்த இனம் பதிவாகவில்லை.
  • 2011 ஆம் ஆண்டில், முதல் இவ்வகை பறவையானது மனித உதவியின்றி இத்தாலியின் டஸ்கனியிலிருந்து மீண்டும் ஜெர்மனியின் பவேரியாவுக்கு இடம்பெயர்ந்தது.
  • தற்போது அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு இலகுரக விமானத்தைப் பயன்படுத்தி ஆஸ்திரியாவிலிருந்து ஸ்பெயின் நாட்டினை நோக்கி அவற்றின் பண்டைய வலசை போதல் பாதையில் செல்வதற்கு இந்தப் பறவைகளில் 36 பறவைகளுக்கு வழி காட்ட முனைந்துள்ளனர்.
  • இந்த வலசை போகும் இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்த ஒரு இலகுரக விமானம் பயன்படுத்தப் படுவது இது முதல் முறையாகும்.
  • இது 1996 ஆம் ஆண்டு வெளியான ஃப்ளை அவே ஹோம் திரைப்படம் மற்றும் 1988 ஆம் ஆண்டில் இயற்கை ஆர்வலர் பில் லிஷ்மேன் அளித்த கனடா வாத்துகள் குறித்த ஆய்வறிக்கை ஆகியவற்றின் மூலம் ஈர்க்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்