வால்ட்ராப் என்றும் அழைக்கப்படும் வழுக்கைத் தலை அரிவாள் மூக்கன் பறவை ஆனது, வட ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம் மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது.
இருப்பினும், வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட அழிவு காரணமாக சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய ஐரோப்பாவில் இந்த இனம் பதிவாகவில்லை.
2011 ஆம் ஆண்டில், முதல் இவ்வகை பறவையானது மனித உதவியின்றி இத்தாலியின் டஸ்கனியிலிருந்து மீண்டும் ஜெர்மனியின் பவேரியாவுக்கு இடம்பெயர்ந்தது.
தற்போது அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு இலகுரக விமானத்தைப் பயன்படுத்தி ஆஸ்திரியாவிலிருந்து ஸ்பெயின் நாட்டினை நோக்கி அவற்றின் பண்டைய வலசை போதல் பாதையில் செல்வதற்கு இந்தப் பறவைகளில் 36 பறவைகளுக்கு வழி காட்ட முனைந்துள்ளனர்.
இந்த வலசை போகும் இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்த ஒரு இலகுரக விமானம் பயன்படுத்தப் படுவது இது முதல் முறையாகும்.
இது 1996 ஆம் ஆண்டு வெளியான ஃப்ளை அவே ஹோம் திரைப்படம் மற்றும் 1988 ஆம் ஆண்டில் இயற்கை ஆர்வலர் பில் லிஷ்மேன் அளித்த கனடா வாத்துகள் குறித்த ஆய்வறிக்கை ஆகியவற்றின் மூலம் ஈர்க்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.