வடன் கோ ஜனோ (Watan Ko Jano) எனும் இளைஞர் பரிமாற்றுத் திட்டத்தை (Youth Exchange programme) மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் ஏற்பட்டு வரும் கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார மேம்பாடுகளைப் பற்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு வெளி அனுபவத்தை தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்திற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய அரசின் காஷ்மீர் பிரிவு (Kashmir Cell) மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில மறுவாழ்வு கவுன்சில் ஆகியவை இத்திட்டத்திற்கு நிதி வழங்குகின்றன.