TNPSC Thervupettagam

வடமேற்கு காற்று ஆராய்ச்சிக்கான சோதனைக் கூடம்

May 22 , 2024 57 days 129 0
  • கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளை முதன்மையாக பாதிக்கும் வடமேற்கு காற்று (நோர்வெஸ்டர்ஸ்) எனப்படும் கடுமையான இடியுடன் கூடிய மழைப் பொழிவு கொண்டு வரும் வானிலை பற்றி ஆய்வு செய்வதற்காக என்று இந்தியா தனது முதல் ஆராய்ச்சி சோதனைக் கூடத்தை நிறுவ உள்ளது.
  • நாட்டின் கிழக்குப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை உருவாகும் நிலை, அதன் பெருக்கம் மற்றும் பரவல் ஆகியவற்றை ஆய்வு செய்வதை இது பெரும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது வானிலை ஆய்வு கருவிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் இடியுடன் கூடிய மழையை முறையாகக் கண்காணிக்க உதவும் பிற உபகரணங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும்.
  • கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா, தெற்கு நேபாளம், பூடான் மற்றும் வங்காளதேசம் ஆகியவற்றில் உருவாகும் வடமேற்கு காற்றுகள் கடுமையான இடியுடன் கூடிய பலத்த  காற்றுடன் மழைப்பொழிவினை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்