வடி/இணைப்புக் குழாயைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்கள்
May 18 , 2024 193 days 158 0
மருத்துவ நடைமுறைகளின் போது சிறிய இரத்த நாளங்களில் வைக்கப்படும் இணைப்புக் குழாயைப் பயன்படுத்துவதால் ஏற்படும் இரத்த ஓட்டம் மற்றும் பிற நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்கான முதல் உலகளாவிய வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த இணைப்புக் குழாய்களை உட்செலுத்துதல், பராமரித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றில் உள்ள மோசமான நடைமுறைகள் ஆனது கிருமிகளை நேரடியாக இரத்த ஓட்டத்தில் உட்செலுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளன.
இது செப்சிஸ் (புண் காரணமாக இரத்தத்தில் நச்சுத்தன்மை உண்டாதல்) போன்ற தீவிர நிலைகளுக்கும், மூளை மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் மேற் கொள்ளப் படும் சிகிச்சைகளில் கடினமான சிக்கல்கள் ஏற்படவும் வழிவகுக்கும்.
இந்த இணைப்புக் குழாய்களை செருகும் இடத்தில் உள்ள மென்மையான திசுக்களில் தொற்றுகளும் ஏற்படலாம்.
2000-2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான செப்சிஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை 24.4% என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் இந்த உயிரிழப்பு 52.3% ஆக அதிகரித்துள்ளது.
இந்தப் புதிய வழிகாட்டுதல்களில் 14 நல்ல நடைமுறை குறித்த அறிக்கைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான முக்கியப் பிரிவுகள் குறித்த சுமார் 23 பரிந்துரைகள் உள்ளன.