TNPSC Thervupettagam

வடிவமைப்பின் அடிப்படையில் பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு அமைப்புகள்

December 1 , 2023 360 days 215 0
  • அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில நாடுகள் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு தொடர்பான முதல் விரிவான சர்வதேச ஒப்பந்தத்தினை வெளியிட்டுள்ளன.
  • மோசமான நடவடிக்கையில் ஈடுபடும் அமைப்புகளிடம் இருந்து செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது தொடர்பான அம்சங்களை இது கையாளச் செய்வதோடு, மேலும், “வடிவமைப்பின் அடிப்படையில் பாதுகாப்பான” செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு  இது அழுத்தமும் கொடுக்கிறது.
  • செயற்கை நுண்ணறிவினை வடிவமைத்துப் பயன்படுத்தும் நிறுவனங்கள் ஆனது, வாடிக்கையாளர்களையும், பொதுமக்களையும் தவறான நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் அவற்றை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும் என்று 18 நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தம் ஆனது பிணைப்பு சார்ந்தது அல்ல. மேலும், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் முறைகேடானப் பயன்பாட்டினைக் கண்காணித்தல், மென்பொருள் வழங்கீட்டு நிறுவனங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் சேதப்படுத்துதலிலிருந்து தரவுகளைப் பாதுகாத்தல் போன்ற பொதுவான பரிந்துரைகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்