TNPSC Thervupettagam

வட்டார கிராம வங்கிகளின் மறு மூலதனமாக்கம்

March 27 , 2020 1577 days 502 0
  • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையானது 2020 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று மூலதனம் மற்றும் இடர் உண்டாக்கும் சொத்துக்களின் விகிதத்தை (CRAR - Capital to Risk weighted Assets Ratio) மேம்படுத்துவதற்காக வட்டார கிராம வங்கிகளின் (RRB - Regional Rural Banks) மறுமூலதனமாக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மேம்படுத்தப்பட்ட CRAR ஆனது கிராமப் பகுதிகளில் RRBகளின் கடன் வழங்கும் திறனைப் பூர்த்தி செய்ய உதவும்.
  • RRBகள் தனது கடன் வழங்குதலில் முன்னுரிமைத் துறைக் கடனுக்கு 75% நிதியை அளிக்க வேண்டும்.
  • இந்த மறுமூலதன நிதியானது 9% என்ற குறைந்தபட்ச CRAR விகிதத்தை  நிர்வகிக்காத வங்கிகளுக்கு அளிக்கப்பட இருக்கின்றது.
  • ஒரு வங்கிக்கான CRAR ஆனது இந்திய ரிசர்வ் வங்கியினால் நிர்ணயிக்கப் படுகின்றது.    
  • RRBகளின் மறுமூலதனமாக்கல் என்ற திட்டமானது 2011 ஆம் ஆண்டில் டாக்டர்.கே.சி. சக்கரபர்த்தி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்