ஒவ்வொரு மணி நேரமும் புதுப்பிக்கப்படும், ஐந்து நாட்களுக்கு முன்கூட்டிய வானிலை முன்னறிவிப்புகள் ஆனது, தற்போது கிராமப் பஞ்சாயத்துகள் மட்டத்திலும் கிடைக்கப் பெறுகின்றன.
இது நாடு முழுவதும் வட்டார அளவிலான சில முன்னறிவிப்புகளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் முக்கிய படிநிலையாகும்.
இது "கிராமப்புற சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அடிமட்ட அமைப்புகளில் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்பதோடு இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்குப் பயனளிக்கும்.
e-GramSwaraj மற்றும் கிராம் மஞ்சித்ரா இணையதளங்கள் மற்றும் மேரி பஞ்சாயத்து செயலி ஆகியவற்றில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை என்று வழங்கப்படும் முன்னறிவிப்புகள் கிடைக்கப் பெறும்.