TNPSC Thervupettagam

வட்டியில்லா வங்கி முறை

November 20 , 2022 610 days 265 0
  • பாகிஸ்தான் அரசானது, இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் 2027 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் வட்டியில்லா வங்கி முறையை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
  • வட்டியில்லா வங்கி முறை என்ற ஒரு கருத்தாக்கமானது, இஸ்லாமிய வடிவ வங்கி முறையிலிருந்துப் பெறப்பட்டது.
  • இது ஒரு நெறிமுறை சார்ந்தத் தரநிலைகளின் அடிப்படையில் செயல்படுவதோடு முஸ்லிம்கள் எந்த விதமான வட்டியையும் செலுத்துவதையோ அல்லது பெறச் செய்வதையோ தடுக்கிறது.
  • இஸ்லாமியத்தின் பொருளாதார நோக்கங்களை அடைவதற்கான பயனுள்ளச் செயற் கருவியாக இது கருதப்படுகிறது.
  • பாகிஸ்தானில் தற்போதுள்ள வட்டி அடிப்படையிலான வங்கி முறையை ஒழிப்பதற்கான முதல் மனு 1990 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டது.
  • கூட்டாட்சி ஷரியத் நீதிமன்றம் ஆனது 2000 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் இந்த முறையை அமல்படுத்துமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
  • பல முறையீடுகளுக்குப் பிறகு, 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நாட்டின் வங்கி அமைப்பில் இருந்து ரிபா (இஸ்லாமியச் சொல்) எனப்படும் வரியினை அகற்ற வேண்டும் என்று அந்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவு விடுத்தது.
  • பாகிஸ்தானின் முதல் முழுமையான இஸ்லாமிய வங்கியான மீசா பாங்க் 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்