2020-21 ஆம் ஆண்டில் 85,606.41 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாடு அரசின் வணிக வரி வருவாய் ஆனது, 2023-24 ஆம் ஆண்டில் 47.19% அதிகரித்து 1,26,005.92 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 40,399.51 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.
வணிக வரிகளின் கீழ் நிர்வகிக்கப்படும் பல்வேறு வரிகள் தொடர்பான வரி, அபராதம் அல்லது வட்டியின் நிலுவைத் தொகையை திரும்ப வழங்குவதற்காக சமாதான் திட்டம் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், 50,000 ரூபாய் வரையிலான வரி நிலுவைகள் தள்ளுபடி செய்யப் பட்டன.
50,000 ரூபாய்க்கும் அதிகமான வரி நிலுவைத் தொகையில் 247.89 கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டுள்ளது என்ற நிலையில் இது முந்தையத் திட்டங்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாகும்.
இந்த முன்னெடுப்பின் மூலம் வருவாய் இழப்புகளின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வதற்காக வணிக வரித் துறையானது தரவுத் தொகுப்புப் பகுப்பாய்விற்காக ஹைதராபாத் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் 129.77 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.