TNPSC Thervupettagam

வணிக வரி வருவாய் அதிகரிப்பு

June 4 , 2024 44 days 173 0
  • 2020-21 ஆம் ஆண்டில் 85,606.41 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாடு அரசின் வணிக வரி வருவாய் ஆனது, 2023-24 ஆம் ஆண்டில் 47.19% அதிகரித்து 1,26,005.92 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் 40,399.51 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.
  • வணிக வரிகளின் கீழ் நிர்வகிக்கப்படும் பல்வேறு வரிகள் தொடர்பான வரி, அபராதம் அல்லது வட்டியின் நிலுவைத் தொகையை திரும்ப வழங்குவதற்காக சமாதான் திட்டம் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், 50,000 ரூபாய் வரையிலான வரி நிலுவைகள் தள்ளுபடி செய்யப் பட்டன.
  • 50,000 ரூபாய்க்கும் அதிகமான வரி நிலுவைத் தொகையில் 247.89 கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டுள்ளது என்ற நிலையில் இது முந்தையத் திட்டங்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாகும்.
  • இந்த முன்னெடுப்பின் மூலம் வருவாய் இழப்புகளின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வதற்காக வணிக வரித் துறையானது தரவுத் தொகுப்புப் பகுப்பாய்விற்காக ஹைதராபாத் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்துள்ளது.
  • கடந்த நான்கு மாதங்களில் 129.77 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்