வர்த்தகத்திற்கான பாராளுமன்ற நிலைக் குழுவானது, இந்திய அரசாங்கத்திற்கு தனது பரிந்துரையை வழங்கியுள்ளது.
தற்போதைய உற்பத்தி ஊக்குவிப்புத் (PLI) திட்டத்தின் கால வரம்பினையும் அதன் மிக முக்கிய நோக்கத்தையும் மேலும் பல துறைகளுக்கு நீட்டிக்கவும், "நிர்வாக ரீதியான தாமதங்கள்" மற்றும் "விதிகளின் இணக்க நெருக்கடிகளைக்" குறைப்பதன் மூலம் அதன் செயல்திறனை மேம்படுத்தவும் கோரியுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தின் பரவல் எல்லையினை இரசாயனங்கள், தோல் பொருட்கள், ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற தொழிலாளர் வளம் அதிகம் தேவைப்படும் துறைகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தவும் பரிந்துரைத்துள்ளது.
தற்போது, PLI திட்டம் ஆனது சுமார் 1.97 டிரில்லியன் டாலர் ஒதுக்கீட்டுடன் கைபேசிகள், ஆளில்லா விமானங்கள், மிகப் பெரிய மின் துறைப் பொருட்கள், தொலைத்தொடர்பு, ஜவுளி, வாகனங்கள், சிறப்பு எஃகு மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 14 துறைகளை உள்ளடக்கியது.
உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதற்காக என பாதுகாப்பு உற்பத்தி, விண்வெளி மற்றும் கப்பல் கொள்கலன்கள் போன்ற கூடுதல் துறைகளுக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தவும் குழு பரிந்துரைத்துள்ளது.