TNPSC Thervupettagam

வணிகமயமாக்கல் - ஆர்க்டிக்

May 26 , 2019 1916 days 672 0
  • இரஷ்யா அணு ஆயுதத் திறன் கொண்ட “உரால்” என்ற ஒரு பனிக்கட்டி உடைப்பானை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது ஆர்க்டிக்கில் உள்ள வணிகம் சார்ந்த வளங்களைக் கைப்பற்றுவதற்காக இரஷ்யாவின் திறனை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • அர்க்திகா (ஆர்க்டிக்) மற்றும் சிபிர் (சைபீரியா) ஆகிய இரண்டு பனிக்கட்டி உடைப்பான்களும் இரஷ்யாவினால் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
  • வெப்பமான காலநிலைகளின் சூழலில், இரஷ்யா புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கி, தனது துறைமுகங்களை மேம்படுத்தி வருகின்றது.
  • வடக்கு கடல் பாதை என்று அழைக்கப்படும் இப்பாதையை ஆண்டு முழுவதுமான கப்பல் போக்குவரத்திற்கு தயாராக இருக்கும் வகையில் இது இப்பாதையின் வழியாக அதிக கப்பற் போக்குவரத்திற்கு வித்திட்டு வருகின்றது.
வடக்கு கடல் பாதை
  • வடக்கு கடல் பாதை என்பது இரஷ்யாவினால் வரையறுக்கப்பட்ட ஒரு கடல் பாதையாகும். இது நோவாயா செம்லியாவிற்கு கிழக்கில் அமைந்துள்ளது. இது குறிப்பாக சைபீரியாவை ஒட்டி, காரா கடலிலிருந்து ரஷ்யாவின் ஆர்க்டிக் கடற்கரையோரமாகப் பயணித்துப் பேரிங் ஜலசந்தியை அடைகின்றது.
  • இந்தப் பாதை முழுவதும் ஆர்க்டிக் கடலில் அமைந்துள்ளது. மேலும் இது இரஷ்யாவின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ - exclusive economic zone) அமைந்துள்ளது.
  • இந்தப் பகுதிகள் ஒரு ஆண்டில் இரண்டு மாதங்கள் மட்டுமே பனிக் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.
  • ஆர்க்டிக் பனிக் கட்டிகள் உருகுதலானது வடக்கு கடல் பாதையின் வணிகப் பயன்பாட்டையும் போக்குவரத்தையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இந்தக் கடல் பாதை ஆர்க்டிக் கடலில் கனரக கப்பல் போக்குவரத்தை அதிகரிக்கும். மேலும் இது சூயஸ் கால்வாயில் கப்பற் போக்குவரத்தினால் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும்.
  • வணிகத்தில் நிகழும் இந்தத் திட்டமிடப்பட்ட மாற்றங்கள் ஏற்கெனவே அச்சுறுத்தல் நிலையில் உள்ள ஆர்க்டிக்கின் சுற்றுச் சூழலுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்