TNPSC Thervupettagam

வணிகம் செய்தலை எளிமையாக்குதல் குறியீடு

July 12 , 2018 2188 days 679 0
  • மாநிலங்களுக்கான மத்திய அரசின் வணிகம் செய்தலை எளிமையாக்குதல் குறியீட்டில் ஆந்திரப் பிரதேசம் முதல் மாநிலமாகி உள்ளது.
  • இந்த குறியீடு, இந்திய அரசாங்கத்தின் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டிற்கானத் துறை (Department of Industrial Policy & Promotion - DIPP) மற்றும் உலக வங்கி ஆகியவற்றால் இணைந்து தயாரிக்கப்பட்டது.
  • ஆந்திரப் பிரதேசத்தை அடுத்து அதன் அண்டை மாநிலமான தெலுங்கானா மற்றும் ஹரியானா ஆகியன முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளது.
  • ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகியன முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • மத்திய அரசாங்கத்தின் ஒழுங்குமுறை செயல்பாடுகள் மற்றும் சேவைகளை திறமையான, பயனுள்ள மற்றும் தெளிவான முறையில் வழங்குவதை மேலும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இந்த வருடம் தொழில்மயமான மாநிலங்கள் எண்ணிக்கையில் குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன.
  • சீர்திருத்த ஆதார மதிப்பு 95.93% மற்றும் கருத்துக்கணிப்பு மதிப்பு 43.90% யுடன் தமிழ்நாடு 15வது இடத்தில் உள்ளது.
  • 2017-ல் இந்த குறியீடு ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகியவற்றை சிறப்பாக செயலாற்றும் மூன்று மாநிலங்களாகக் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்