TNPSC Thervupettagam

வண்ணத்துப் பூச்சி இனங்களின் அதிக எண்ணிக்கை

December 24 , 2024 29 days 153 0
  • துறையூர் அருகேயுள்ள பச்சமலையில் வண்ணத்துப் பூச்சி இனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்தியக் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டு உள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் 15 இனங்களும் 2022 ஆம் ஆண்டில் 109 இனங்களும் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போதையக் கணக்கெடுப்பில் அவற்றில் 126 இனங்கள் இந்த மலைகளில் கண்டறியப்பட்டுள்ளன.
  • பச்சமலைக் குன்றுகள் பல காப்புக் காடுகளை உள்ளடக்கியதாகும்.
  • இது செங்காட்டுப்பட்டி நீட்சி, காளியம்மன் கோவில் திட்டு, சோலமதி, கன்னிமார் சோலை, சுற்றுச்சூழல் சார் சுற்றுலாப் பூங்கா பகுதி (மேல் மட்ட செங்காட்டுப்பட்டி) மற்றும் மங்கலம் நீர்வீழ்ச்சி பகுதியின் காப்புக்காடுகளை உள்ளடக்கியது.
  • வாழ்விட மதிப்பீடு ஆனது, கலப்பு இலையுதிர் காடுகள், நதிக்கரை மற்றும் இரண்டாம் நிலை காடுகளின் வளர்ச்சியை உள்ளடக்கியது.
  • சுமார் 126 இனங்களின் ஒரு எண்ணிக்கையானது வளமான வண்ணத்துப் பூச்சியின் எண்ணிக்கை என அழைக்கப்படுகிறது.
  • இந்த மலைக் குன்றுகள் ஆனது 175 வண்ணத்துப் பூச்சி இனங்களைக் கொண்டிருக்கும் ஆற்றல் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்