சமீபத்திய இந்திய வனவிலங்கு கணக்கெடுப்பு நிறுவனத்தின் (Zoological Survey Of India) ஆய்வுப்படி, மேற்குவங்க மாநிலத்தின் ஹீக்ளி மாவட்டத்திலுள்ள சிங்கூர் பகுதியானது குறைந்தபட்சம் 69 வகை பட்டாம்பூச்சிகளுக்கு உறைவிடமாக உள்ளதென கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கூரில் அடையாளம் காணப்பட்டுள்ள இவ்வகை பட்டாம்பூச்சிகளில் 5 பட்டாம்பூச்சி வகைகள் மிகவும் அரியவை. மேலும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி இவை பாதுகாக்கப்பட வேண்டியவை ஆகும்.
அந்த 5 வகை பட்டாம்பூச்சிகளாவன,
Tree filter
Striped Albatross.
Pea Blue
Common Indian Crow
Danaid egg fly
சிங்கூர் பகுதியானது பல்வகை பட்டாம்பூச்சிகளைப் போல பல்வகை தவளைகள் மற்றும் பறவைகளையும் கொண்டுள்ளது.
சிங்கூர் பகுதியானது ஓர் வனப்பகுதி அல்ல. நெல், உருளை, காய்கறி உற்பத்திகளுக்கு பெயர் பெற்ற பகுதியாகும்.