TNPSC Thervupettagam

வன உயிர் பாதுகாப்பு விரைவு தீர்ப்பு நீதிமன்றங்கள்

February 21 , 2018 2499 days 883 0
  • வன உயிர் பாதுகாப்பிற்கான முக்கிய முன்னெடுப்பாக்க, புலிகள், காண்டாமிருகங்கள் மற்றும் பிற வன உயிர்களின் வேட்டையாடலை கட்டுப்படுத்துவதற்கு அஸ்ஸாம் மாநில அரசு மாநில வனப் பாதுகாவலர்களுக்கு சுய-குண்டேற்று துப்பாக்கிகள் (self-loading rifles -SLRs)  போன்ற நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளது.
  • புலிகள், காண்டாமிருகங்கள் மற்றும் பிற வன உயிர்களின் பாதுகாப்பு, மீட்பு, மற்றும் மறுவாழ்விற்காக ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை நவீனப்படுத்துதல் என்ற புதிய திட்டத்தை அஸ்ஸாம் அரசு தொடங்கியுள்ளது.
  • வன விலங்குகளின் வேட்டையாடல் மற்றும் அவை தொடர்பான பிற குற்றங்களை பிரத்தியேகமாக கையாளுவதற்காக நாட்டில் முதல் முறையாக 10 வன உயிர் விரைவுத் தீர்ப்பு நீதி மன்றங்கள் அஸ்ஸாம் அரசினால் அமைக்கப்பட்டுள்ளது.
  • வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ஐந்து தேசியப் பூங்காக்கள், 19 வன உயிர் சரணாலயங்கள் உள்ளன. 91 சதவீத இந்திய காண்டாமிருகங்களுக்கு அஸ்ஸாம் மாநிலம் வாழிடமாக உள்ளது.
  • அஸ்ஸாமில் உள்ள ஐந்து தேசிய பூங்காக்களாவன
    • காஸிரங்கா
    • மனாஸ்
    • நமேரி
    • ராஜீவ் காந்தி ஒராங்
    • திப்ரு சைக்கோவா
  • மனாஸ் மற்றும் திப்ரு சைக்கோவா ஆகியவை அஸ்ஸாமில் உள்ள உயிர்க்கோள இருப்புகளாகும் (Biosphere reserve).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்