வன மஹோத்சவ் தினம் என்பது ஜூலை மாதம் முதல் வாரத்தில் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிற வகையில் மரங்கள் நடும் ஒரு விழாவாகும்.
நமது வாழ்வில் காடுகள், வனப்பகுதிகள் மற்றும் மரங்களின் முக்கியத்துவம் பற்றிய ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இது அனுசரிக்கப்படுகிறது.
1950 ஆம் அண்டில் அப்போதைய மத்திய வேளாண்மை மற்றும் உணவுத் துறை அமைச்சராக இருந்த கே.எம்.முன்ஷி அவர்களால் இது தொடங்கப் பட்டது.
உள்ளூர் மக்களை மரம் நடும் செயல்களில் ஈடுபட வைப்பதும் அவர்களிடம் சுற்றுச் சூழல் விழிப்புணர்வைப் பரப்புவதும் வன மஹோத்சவ் தினம் கொண்டாடுவதன் பின்னணியில் உள்ள ஒரு நோக்கம் ஆகும்.