TNPSC Thervupettagam

வனப்பரப்பு கணக்கெடுப்பு – LiDAR

June 29 , 2021 1155 days 609 0
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பத்து மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் LiDAR (ஒளி மூலம் கண்டறிதல் மற்றும் வரம்பு அளவிடல்) என்ற தொழில்நுட்பம் அடிப்படையிலான கணக்கெடுப்பினுடைய விரிவான திட்ட அறிக்கைகளை வெளியிட்டார்.
  • இதில் கணக்கெடுக்கப்பட்ட மாநிலங்கள் அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகியனவாகும்.
  • வனப்பகுதி கணக்கெடுப்புப் பணிகளானது WAPCOS எனும் அமைப்பிடம் வழங்கப் பட்டுள்ளது.
  •  WAPCOS என்பது ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழான ஒரு மினிரத்னா பொதுத் துறை நிறுவனமாகும்.
  • LIDAR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்தக் கணக்கெடுப்பு இந்தியாவில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமிக்க ரீதியிலான செயல்முறை ஆகும்.
  • இந்தக் கணக்கெடுப்பானது வனப்பகுதிகளில் நீர் மற்றும் தீவன இருப்புகளை அதிகரிக்க உதவும், இதனால் மனித-விலங்கு மோதலானது குறையும்.
  • LIDAR தொழில்நுட்பமானது 90% துல்லியத் தன்மை கொண்டதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்