வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதாவானது, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதியன்று, பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இது 1972 ஆம் ஆண்டு வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டத்தில் குறிப்பிடத்தக்க சில திருத்தங்களைச் மேற்கொள்கிறது.
இந்த ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப் பட்டது.
இந்தச் சட்டத்தினால் பாதுகாக்கப்படும் உயிரினங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
அழியும் நிலையில் உள்ள வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் (CITES) இனங்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கையின் விதிகளை இந்தச் சட்டத்தில் செயல்படுத்துவதன் மூலம் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது.
43வது பிரிவில் மிக முக்கியமான திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல் அட்டவணையில் இடம் பெற்றுள்ள யானை இனங்களை, ‘சமய அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும்’ பயன்படுத்த இது அனுமதிக்கிறது.
இத்திருத்தத்திற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் விலங்கு நிபுணர்கள் ஆகியோர் கடும் விமர்சனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் விலங்குகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத வர்த்தகத்தினைத் தடுக்கும் இன்ன பிற ஒழுங்கு முறைச் சட்டங்கள்
சுங்கச் சட்டம், 1962
வெளிநாட்டு வர்த்தகம் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1992
ஏற்றுமதி இறக்குமதி கொள்கை மற்றும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972.