ஐக்கிய நாடுகள் சபையில் (UN) பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதற்காக 16 நாடுகளின் குழு ஒரு துணிச்சல்மிக்க முயற்சியை மேற்கொண்டுள்ளது.
வனுவாடு குடியரசு தலைமையிலான இந்தக் குழுவானது, பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினையில் சர்வதேச நீதிமன்றத்திடம் (ICJ) இருந்து ஆலோசனைக் கருத்தைக் கோருகிறது.
"பருவநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளைத் தடுப்பதற்கும் அவற்றைச் சரி செய்வதற்குமான அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வக் கடமைகளைத் தெளிவு படுத்துவது" குறித்து சர்வதேச நீதிமன்றத்திடம் (ICJ) இருந்து ஆலோசனைக் கருத்தைப் பெறுவதற்காக வேண்டி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மூலம் வனுவாட்டு ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
சர்வதேச நீதிமன்றம் வாதாடுதல் (சர்ச்சைக்குரியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்) மற்றும் ஆலோசனை வழங்குதல் ஆகிய இரண்டு வகையான அதிகார வரம்புகளைக் கொண்டுள்ளது.
சர்ச்சைக்குரியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் என்ற அதிகார வரம்பு என்பது சம்பந்தப் பட்ட அரசுகளுக்கு இடையேயான பல்வேறு சட்ட ரீதியிலான மோதல்களைத் தீர்ப்பதைக் குறிக்கிறது.
சர்ச்சைக்குரியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் அதிகார வரம்பில் வழங்கப் பட்ட முடிவுகள் போலல்லாமல், ஆலோசனை அதிகார வரம்பின் கீழ் சர்வதேச நீதிமன்றம் வழங்கும் ஆலோசனைக் கருத்துக்கள் பிணைப்பு அதிகாரம் அற்றது.
பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்து ஆனது உலக நாடுகள் அளவில் மேற்கொள்ளப்படும் பருவநிலை தொடர்பான வழக்குகளிலும் எளிதாகக் கிடைக்கப் பெறும்.