TNPSC Thervupettagam

வன் தன் விகாஸ் கேந்திரா

April 13 , 2018 2291 days 773 0
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் மாதிரி சோதனை அடிப்படையில் (pilot basis) முதல் பன்-பயன்பாட்டு (multipurpose) “வன்தன் விகாஸ் கேந்திரா மையத்தை (Van Dhan Vikas Kendra)  அமைக்க மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் (Ministry of Tribal affairs) அனுமதி அளித்துள்ளது.
  • குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் சிறு வன உற்பத்தி விலை பொருட்களினுடைய மதிப்பு சங்கிலியின் மேம்பாடு ஆகியவற்றின் வழியேயான சிறு வனஉற்பத்தி விளைபொருட்களின் சந்தைப்படுத்தலுக்கான இயங்குமுறை (Mechanism for marketing of Minor Forest Produce (MFP) through Minimum Support price (MSP) and development of Value chain for MFP) எனும் மத்திய அரசுத் திட்டத்தின் முக்கியப் பகுதியே வன்தன் விகாஸ் கேந்திரா மையமாகும்.
  • இது சிறு வனஉற்பத்தி விளைபொருட்களின் சேகரிப்பை தங்களது வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாகக் கொண்டு வனங்களில் வாழ்கின்ற பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டமாகும்.
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள முதல் “வன்தன் விகாஸ் கேந்திரா” மையமானது திறன் மேம்பாடு (skill upgradation) மற்றும் திறன் கட்டமைப்புப் பயிற்சிகளை (capacity building training) வழங்கும். மேலும் இது சிறு வனஉற்பத்தி விளைபொருட்களுக்கு முதன்மைப் பதப்படுத்துதல் (primary processing) மற்றும் மதிப்புக் கூட்டு வசதிகள் (value addition facility) ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
  • தங்களது வருடாந்திர வருமானத்தில் 20 முதல் 40 சதவீதத்தை சிறு வனஉற்பத்தி விளைபொருட்களிலிருந்தே பழங்குடியின மக்கள் பெறுகின்றனர்.
  • இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டிணைவு நிறுவனமானது (TRIFED-Tribal Cooperative Marketing Development Federation of India) மாதிரி அடிப்படையிலான விகாஸ் கேந்திரா மையத்தை அமைக்கும் பணியை சத்தீஸ்கர் மாநில சிறு வனஉற்பத்தி விளைபொருள் கூட்டமைப்பிற்கு (Chhattisgarh Minor forest produce Federation-CGMFP) வழங்கியுள்ளது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்