TNPSC Thervupettagam
November 22 , 2017 2560 days 904 0
  • அமெரிக்காவின் யேசோமைட் தேசியப் பூங்காவின் கிழக்கில் அமைந்துள்ள கடின வாழ்வு சூழலுடைய (in hospitable) கலிபோர்னியா ஏரியில் செழித்தோங்கும் ஓர் சிறிய ஈக்களே வன் கார / களர் ஈக்கள்  (Alkali Flies) ஆகும்.
  • இந்த ஏரி பெருங்கடலைப் போன்று மூன்று மடங்கு உவர்ப்பையும், உயர் அளவிலான PH-ம், அதிக அளவிலான சோடியம் கார்பனேட்டையும், போராக்ஸைட்டையும் கொண்டதால் பெரும்பாலும் எண்ணெயைப் போலான நீரை உடையது.
  • அதனால்  இந்த வன்கார  ஈக்களால் ஈரமடையாமல் நீரில் மூழ்கி வர இயலும்.
  • இந்த கார ஈக்கள் கடுமையான உவர்ப்பும், காரத்தன்மையும் உள்ள நீரை மொய்க்கவல்லது. இருப்பினும் நீரை விட்டு வெளிவரும் போது ஈரமடையாமலே இருக்கும்.
  • 6 மி.மீட்டர் (ஒரு இன்ச்சில் கால் பங்கு) நீளமுடைய இந்த வன்கார வண்டுகள் சிறப்பு மெழுகுடன் கூடிய பெரும் எண்ணிக்கையிலான நேர்த்தியான மயிரிழைகளைக் கொண்டவை.
  • இவை ஈக்களின் உடலை இறுக அணைத்து குமிழ் வடிவத்தில் மூடுவதால் நீரில் மூழ்கும் போது ஈரமாகாமல் தடுக்கின்றன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்