வன்னியருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
November 10 , 2021 1116 days 816 0
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த வன்னியர் சமுதாயத்திற்கு இந்த வகுப்பின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட 20% ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடாக 10.5% இட ஒதுக்கீடை வழங்குவதற்கான தமிழக அரசின் சட்டத்தினை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.
இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது என்று உயர் நீதிமன்றம் கருதியது.
மாநில அரசிற்கு உள் இட ஒதுக்கீடு அளித்திட அதிகாரம் தரப் படவில்லை என்று அது கூறியது
எவ்வித தெளிவான சாதிக் கணக்கெடுப்பு இல்லாத போது எவ்வாறு அந்த சதவிகிதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது என்று அது கேள்வி கேட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் இந்த உத்தரவானது, இந்த ஒதுக்கீட்டின் கீழ் ஏற்கனவே கல்வி நிறுவனங்களில் சேர்ந்தவர்களின் சேர்க்கையைப் பாதிக்காது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பின்னணி
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இடஒதுக்கீட்டிற்குள் வன்னியர்களுக்கு என்று 10.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஒரு சட்டமானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அன்று முந்தைய அதிமுக அரசால் அறிவிக்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான தற்போதைய அரசு இந்த இட ஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த ஆணை ஒன்றைப் பிறப்பித்தது.