TNPSC Thervupettagam

வன்னியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

April 4 , 2022 841 days 445 0
  • மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவிற்குட்பட்ட வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், கடந்த ஆண்டு தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை (தமிழ்நாடு சிறப்பு இட ஒதுக்கீட்டுச் சட்டம் 2021) ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
  • அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களின் சேர்க்கையிலும் இதன்மூலம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட இருந்தது.
  • வன்னியர் சமூகத்தின் மீது ஒப்பீட்டளவிலான  ஒரு பின்தங்கிய நிலையைக் காட்டச் செய்வதற்குப் போதுமான தரவுகள் எதுவும் இல்லாமல் எண்களின் அடிப்படையில் மட்டுமே இந்தச் சட்டமானது கொண்டு வரப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
  • மேலும் நீதிமன்றமானது இந்த ரீதியில் சட்டம் இயற்றுவதற்கு மாநிலத்திற்கு எந்த வித தடையும் இல்லை என்றும் கூறியது.
  • அவ்வாறு இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றப் படுகையில் சாதி ஒரு அடிப்படையாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே அடிப்படையாக இருக்கக் கூடாது என்றும் அது கூறி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்