தமிழக அரசானது பிப்ரவரி 26 அன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (V) பிரிவின் கீழ் உள்ள சமூகத்திற்கு தற்காலிகமாக 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
இது பிப்ரவரி 26 அன்று ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றது.
இது சுருக்கமாக 2021 ஆம் ஆண்டின் சிறப்பு இட ஒதுக்கீட்டுச் சட்டம் என்று அழைக்கப் படுகிறது.
மேலும் இது இரண்டு பிரிவாக உள்ளது - ஒன்று 25 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் 68 சீர் மரபினர் (Denotified Communities) ஆகியோரையும், மற்றொன்று மீதமுள்ள 22 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களையும் உள்ளடக்கியதாகும்.
இதில் வன்னிய குல சத்திரியர் சமூகத்தில் வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னி குல சத்திரியர் ஆகியோர் அடங்குவர்.
இந்த மசோதா சீர் மரபினர் சமூகங்களுக்கும் மற்றும் அதைப் போன்றுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும் 7% உள் ஒதுக்கீட்டையும் வழங்குகிறது.
மேற்கண்ட பிரிவில் சேர்க்கப்படாத பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு 2.5% ஒதுக்கீடு வழங்கப் பட இருக்கிறது.
இது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே.
இதில் நீதிபதி ஏ.குலசேகரன் ஆணையம் அதன் பரிந்துரைகளை வழங்கிய பின்னர் மாற்றங்கள் செய்யப்படும்.
இது தமிழ்நாட்டின் சாதிகள், சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் பற்றிய அளவிடக் கூடிய தரவுகளைச் சேகரிக்க அமைக்கப் பட்டது.