இந்திய இராணுவத்தின் சென்னைப் பொறியாளர்கள் குழுவானது, முண்டகை கிராமத்தை அடைவதற்காக, சூரல் மலை பகுதியில் முன்னதாகவே கட்டமைக்கப் பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு "பெய்லி பாலத்தை" அமைத்துள்ளது.
அக்குழுவானது, சுமார் 190 மீ நீளமுள்ள இந்தப் பாலத்தை சுமார் 31 மணி நேரம் என்ற சாதனை நேரத்தில் கட்டி முடித்துள்ளனர்.
மேஜர் சீதா அசோக் செல்கே என்பவர் மட்டுமே அந்த தரைப் படைப் பிரிவில் இருந்த ஒரே பெண் ரராணுவ அதிகாரி ஆவார்
பெய்லி பாலம் என்பது முன்னதாகவே தயாரிக்கப்பட்ட கூறுகளைக் கொண்டுள்ள விரைவில் நிறுவப் படக்கூடிய முன்கூட்டியே ஒருங்கிணைக்கப்பட்ட பாலமாகும்.
இது தளத்தில் விரைவாகவும் திறன் மிக்க முறையில் நிறுவவும் வழிவகுக்கிறது.
பெய்லி பாலம் ஆனது இரண்டாம் உலகப் போரின் போது, கட்டிடப் பொறியாளர் டொனால்ட் கோல்மன் பெய்லி என்பவரால் உருவாக்கப்பட்டது.