TNPSC Thervupettagam

வயிற்றுப்போக்கிற்கு எதிரான ETVAX தடுப்பூசி

November 26 , 2019 1700 days 687 0
  • வங்கதேசத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவப் பரிசோதனையில் என்டோரோடாக்சிஜெனிக் ஈ. கோலை வயிற்றுப்போக்கிற்கு (E. coli diarrhoea - ETEC) எதிராக வழங்கப்பட்ட வாய்வழி, செயலிழக்கப்பட்ட தடுப்பூசியானது பச்சிளங் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பாக உள்ளது என்று கண்டறியப் பட்டுள்ளது.
  • ETEC பாக்டீரியாவானது வயிற்றுப்போக்கிற்கு ஒரு முக்கியக் காரணமாக விளங்கி வருகின்றது.
  • இவை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கும் அக்குழந்தைகளின் இறப்பிற்கும் காரணமாக திகழ்கின்றது.
  • இந்தத் தடுப்பூசியானது ஸ்வீடனின் கோதன்பர்க் பல்கலைக் கழகத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • தற்போது வரை வயிற்றுப்போக்கிற்கு தடுப்பூசி ஏதும் கண்டுபிடிக்கப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்